படப்பிடிப்பில் விபத்து – நடிகை சம்யுக்தா ஹெக்டேவுக்கு என்ன ஆச்சு?

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பலத்த காயம் அடைந்தார். கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன் கோமாளி,…

படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே பலத்த காயம்
அடைந்தார்.

கன்னட திரையுலகின் இளம்நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் கன்னட பிக்பாக்ஸ்
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். இவர் தமிழில் நடிகர் ஜெயம்ரவியுடன்
கோமாளி, மன்மதலீலை, பப்பி உள்ளிட்ட படங்களிலும், கன்னடத்தில் கிரிக்பார்ட்டி,
காலேஜ் குமார் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். பெங்களூருவில் வசித்து
வரும் அவர் தற்போது கன்னட இயக்குனர் அபிஷேக் வசந்த் இயக்கத்தில் கிரீம் என்ற
படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பெங்களூரு கன்டீரவா ஸ்டூடியோவில் நேற்று நடைபெற்றது. அப்போது ஒரு சிறிய சண்டை காட்சியில் நடிகை சம்யுக்தா ஹெக்டே கலந்துகொண்டு நடித்தார். அந்த சமயத்தில் அவர் காலில் தசைபிடிப்பு ஏற்பட்டு தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவரை படக்குழுவினர் மீட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கிரீம் படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.