யூடியூபர் மதனின் ஜாமீன் தள்ளுபடி

யூடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது. தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டின் போது, சிறார்களிடம் ஆபாசமாக பேசியதாக…

யூடியூப் தளத்தில் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மதனின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

தடை செய்யப்பட்ட பப்ஜி ஆன்லைன் விளையாட்டின் போது, சிறார்களிடம் ஆபாசமாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த யூடியூபர் மதனை, தருமபுரியில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து பப்ஜி மதனுக்கு ஜூலை 3ஆம் தேதி வரையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகாவுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எட்டு மாத கைக்குழந்தையுடன் நீதிமன்றக் காவலில் இருந்த கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது. பப்ஜி மதனுக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை அழித்துவிடுவார் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நீதிமன்றத்தில் வாதிட்டதால், மதனின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.