முக்கியச் செய்திகள் இந்தியா

பிரதமர் மோடி, உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட நெருக்கம் கொண்டவர்கள்: சிவசேனா விளக்கம்

பிரதமர் நரேந்திரமோடி-மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இருவரும் தனிப்பட்ட முறையில் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர்கள் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ரவத் கூறி உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி தேர்தலில் போட்டியிட்டது. தேர்தலில் வென்ற பின்னர் ஆட்சியமைப்பதில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பாஜக தலைமையில் ஆட்சி அமைந்த போதிலும், திடீரென ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே திடீரென கூட்டணி ஏற்பட்டது. இதையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதலமைச்சர் ஆனார்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்துக்கு தடுப்பூசிகள் ஒதுக்குவதில் மத்திய அரசு பாராபட்சம் காட்டுவதாக உத்தவ் தாக்ரே தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இந்த நிலையில் கடந்த 8ம் தேதி டெல்லி சென்ற முதலமைச்சர் உத்தவ் தாக்ரே பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையே 40 நிமிடங்கள் சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிலையில் இது குறித்து இப்போது கருத்துத் தெரிவித்துள்ள சிவசேனா தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், பிரதமர் மோடி, முதலமைச்சர் உத்தவ் தாக்ரே இருவரும் 40 நிமிடங்கள் சந்தித்துப்பேசினர். இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் சிவசேனா-பாஜக இடையே உறவு ஏற்படும் என்று கருதக்கூடாது. எங்களுடைய வழி தனி வழி. எனினும் பிரதமர் மோடியின் குடும்பத்துக்கும்-தாக்ரேவின் குடும்பத்துக்கும் இடையே தனிப்பட்ட முறையில் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதே நேரத்தில் அரசியல் ரீதியாக நாங்கள் வேறுபட்டிருக்கின்றோம். அதே போலத்தான் சரத்பவாருடன் நாங்கள் அரசியல் ரீதியாக ஒன்று பட்டிருக்கின்றோம். தனிப்பட்ட ரீதியில் வேறுபட்டு இருக்கின்றோம். இதுதான் மகராஷ்டிரா அரசியல்,” என்றார்.

Advertisement:
SHARE

Related posts

குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ

Ezhilarasan

நாடாளுமன்றத்தில் அமளி; குடியரசுத் துணைத்தலைவர் கவலை

Halley karthi

11 ஆயிரம் கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்: 155 பேர் மீது வழக்குப்பதிவு

Gayathri Venkatesan