நாட்டின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை ‘புஷ்பக்’ சோதனை வெற்றி!

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான ‘புஷ்பக்’ நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த விண்கலம்…

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான ‘புஷ்பக்’ நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

15 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆர்எல்வி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விண்கலம் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. இந்த விண்கலம் 2016 ஆம் ஆண்டில் ஸ்ரீ ஹரிகோட்டா இருந்து இஸ்ரோவின் முதல் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஹெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்த விண்கலம் பத்திரமாக பூமிக்குத் திரும்பியது. இதன்பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டில் இஸ்ரோ தயாரித்த புதிய விண்கலம் ஹெலிகாப்டர் மூலம் வானில் பறக்க விடப்பட்டது. இந்த விண்கலம் பத்திரமாக ஓடுபாதையில் தரையிறங்கியது.

இதையும் படியுங்கள் : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பயங்கரம்!… இசை அரங்கிற்குள் துப்பாக்கி சூடு | 40 பேர் பலி; 100+ காயம்!

இதையடுத்து, கர்நாடகாவின் சல்லகெரேவில் உள்ள ஏரோநாட்டிகல் சோதனை தளத்தில் இருந்து நேற்று காலை 7 மணியளவில் இஸ்ரோவால் ராக்கெட் ஏவப்பட்டது.  இந்த விண்கலம் ஆர்எல்வி-ன் மூன்றாவது தரையிறங்கும் மிஷனாகும்.

இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் சுமார் 4.5 கி.மீ உயரத்திற்கு ஏவுகணையை கொண்டு செல்லப்பட்டு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட பெட்டி அளவுருக்களை அடைந்த பின்னர் விடுவிக்கப்பட்டது.இந்த சோதனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதாக இஸ்ரோ தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

https://twitter.com/isro/status/1770996593292136953?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1770996593292136953%7Ctwgr%5Ed66413584eea38b6c0ff964c2c8c367c7b58e46c%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcmsadmin.maalaimalar.com%2F

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.