புதுச்சேரியில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. தமிழகத்தில் 234 தொகுதிகளுக்குக் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. புதுச்சேரியில் 30 தொகுதிகளில் பதிவான வாக்குகள் 6 மையங்களில் எண்ணப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
80 வயது, மாற்றுத்திறனாளிகள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் என 17,148 தபால் வாக்குகள் இதுவரை பதிவாகி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள 23 தொகுதிகளுக்கு லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி, மகளிர் அரசு தொழில்நுட்ப கல்லூரி, மோதிலால் நேரு அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதேபோல் காரைக்காலில் உள்ள 5 தொகுதிகளுக்கு அண்ணா அரசு கலைக்கல்லூரியிலும், மாகே மற்றும் ஏனாம் பிராந்தியத்தில் வாக்குகள் எண்ணப்படுகிறது.
166 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதுவரை 17148 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளது. வாக்கு எண்ணிக்கை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது, ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 4 சுற்றுகள் வரை எண்ணப்படவுள்ளது. மாநிலம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.