ட்ரோன் கேமரா உதவியுடன் கள்ளச்சாராய வேட்டை – ஆரணி போலிசார் அதிரடி!

ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம்…

ஆரணி பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் வனப்பகுதியில் டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன் போலீசார் கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச்சாராயம் குடித்துவிட்டு 14 பேர் மரணம் அடைந்ததையடுத்து, தமிழகம் முழுவதும் தீவிர கள்ளச்சாராயத் தடுப்பு வேட்டையில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக கள்ளச்சாராய வியாபாரிகள் பலர் கைது செய்யப்படுவதுடன், பல்லாயிரம் லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராய ஊறல்கள் காவல்துறையினர் மற்றும் மதுவிலக்கு போலீசாரால் அழிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கள்ளச்சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனர். இன்று காலை ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் கண்ணமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பள்ளகொள்ளை மற்றும் காளசமுத்திரம் ஆகிய பகுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஐந்து போலீஸ் குழுக்கள், மலை கிராமத்தினர் கள்ளச்சாராயம் கடத்தி வந்து விற்பனையில் ஈடுபடுகின்றனரா என வனப்பகுதிகளில்  சோதனை மேற்கொண்டது.

மேலும் வனப்பகுதி முழுவதும் ட்ரோன் கேமராக்கள் உதவியுடன், கள்ளச்சாராயம் மற்றும் வனப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாடுவது குறித்தும் டிஎஸ்பி தலைமையிலான குழு தீவிரமாக கண்காணித்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.