தவெகவின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா சென்னை நீலாங்கரையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய் தலைமை உரையாற்றியானார். அப்போது பேசியவர், “என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான நண்பா நண்பீஸ்க்கும், பெற்றோருக்கும் எனது வணக்கம். சிலர் நான் பேசுவதை அரசியலாக்க முயற்சிப்பார், அதை பற்றி எனக்கு கவலையில்லை. ஊழலை கட்டுப்படுத்துவதற்காக நான் எடுத்த சில முயற்சிகளால் சிலரின் அடித்தளம் ஆடிப்போய் உள்ளது.
அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள கல்வித்துறையில் ஊழல் செய்வதா? மற்ற துறைகளில் ஊழல் என்றால் கூட பரவாயில்லை. ஆனால் கல்வித்துறையில் ஊழல் நடப்பதை எப்படி ஏற்பது? எப்படி வேடிக்கை பார்க்க முடியும். பள்ளிகளின் பாதுகாப்பில் கூட ஊழல் செய்வதா? பள்ளிகளின் பாதுகாப்பு விஷயத்தில் விளையாடி உள்ளனர், கும்பகோணம் பள்ளி தீவிபத்தை நினைத்தால் மனது பதறுகிறது.
ஊழல் என்பது பழைய விஷயம் தான் அதை முற்றிலும் ஒழிக்காவிட்டாலும் கட்டுப்படுத்த முடியும். எனக்கு முன் வைத்துள்ள 3 கோப்புகளை பற்றி கூறினேன், திறந்துதான பாருங்களேன் என கூறுகின்றனர்.
அறிவுலகமா? ஊழல் உலகமா? என தெரியவில்லை. வாழ்க்கையில் எங்கும் எப்போதெல்லாம் மாணவர்கள் உஷாராக இருக்க வேண்டும் என்றார். இதனை தொடர்ந்து பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு கல்வி விருது மற்றும் ஊக்கத் தொகைகளை வழங்கி வருகிறார்.




