“ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக” – மாணிக்கம் தாகூர் விமர்சனம்!

ஆளுநர் மாளிகை வாசலில் திமுக சரணாகதி அடைந்துள்ளது என்று மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய புகாரில் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீதும், மனு அளிக்க வந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் அர்லேகரை, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். இதனை காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியொட்டுள்ள எக்ஸ் தல பதிவில்,

“யூ ஆர் ஜஸ்ட் எ போஸ்ட்மேன்!” என்று மேடையில் முழங்கியவர்கள், இன்று அதே ‘தபால்காரரிடம்’ தபால் கொடுக்க வரிசையில் நிற்கிறார்கள்!

அன்று அதிகாரம் கையில் இருந்தபோது “ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் எதற்கு?” என்று கொள்கை முழக்கம்; இன்று பதவி போனதும் ஆளுநர் மாளிகை வாசலில் சரணாகதி அடைந்துள்ளது திமுக!

மொத்தத்தில், உதயநிதியின் வழி அது ஆளுநர் வழி மற்றும் பாஜக வழி! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.