தவெக சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் சிறப்பு மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு தொகுதி வாரியாக கல்வி விருது, உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான முதல்கட்ட கல்வி விருது நிகழ்ச்சி கடந்த 4ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, தவெக சார்பில் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா, இன்றும் நாளையும் என இரண்டு நாட்கள் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தவெகவின் 2ம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா தொடங்கியது. இந்த விழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பெரம்பலூர், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் முதலமைச்சர் விஜய் மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறார்.




