முக்கியச் செய்திகள் கொரோனா

இந்தியாவில் கொரோனா 3வது அலை எப்போது வரும்?

கொரோனா 3வது அலை இந்தியாவை தாமதமாக தாக்கும் என கொரோனா தடுப்பு பணிக்குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் ஏப்ரல் – மே மாதங்களில் உச்சத்தில் இருந்த கொரோனா 2வது அலை தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளது. சமீபத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியுடன் இணைந்து ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் கொரோனா 2 அலையைப் போல  3வது அலை கடுமையாக இருக்காது என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில் மத்திய அரசின் கொரோனா தடுப்பு பணிக் குழுத் தலைவர் என்.கே.அரோரா நேற்று அளித்த பேட்டியில்,  “ஐசிஎம்ஆர்  அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், இந்தியாவில் கொரோனா 3வது அலை வர தாமதமாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். கொரோனா வைரஸின் மூன்றாவது அலை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை தாமதிக்கும் எனக் கூறிய அவர், இந்த 6-8 மாத காலத்திற்குள் நாடு முழுவதுமுள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். 

வரும் நாட்களில் தினந்தோறும் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய அரோரா, “டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் புதிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், டெல்டா ப்ளஸ் வைரஸுக்கும் மூன்றாவது அலைக்கும் தொடர்பிருப்பதாக நாம் பார்க்க முடியாது” என்றார். 

Advertisement:

Related posts

சசிகலா விடுதலையால் எந்த மாற்றமும் ஏற்படாது: ஜி.கே.வாசன்

Niruban Chakkaaravarthi

ரூ.4000 கொரோனா நிவாரணம் உட்பட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் !

Halley karthi

900 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்த எரிமலை!

Ezhilarasan