டோக்கியோவில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் ஏன் அறிவித்தார் என்ற விலக்கத்தை அவர் கொடுக்கவில்லை.
39 வயதாகும் செரீனா, ஒலிம்பிக் போட்டிகளில் 4 தங்கப் பதக்கங்களையும், 23 முறை Grand Slam விருதுகளையும் வென்றவர். இந்த முறை அவர் ஒரு பட்டத்தை வென்றிருந்தால், பெண்கள் ஒற்றையர் பிரிவில் வரலாற்றில் அதிக பட்டம் வென்றவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் மார்கரெட் சாதனையை அவர் சமன் செய்திருப்பார்.
நாளை தொடங்கும் விம்பிள்டன் டென்னிஸில் களம் இறங்க இருக்கிறார் அவர். இந்த போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல அவர் முழு முனைப்பு காட்டுவார்.







