முக்கியச் செய்திகள் இந்தியா

ஆந்திராவில் விநோத முறையில் திருமணம்!

ஆந்திராவில் வித்தியாசமான கோலத்தில் மணமகனும், மணமகளும் திருமணம் செய்து கொண்டது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தப் பகுதியில் மர்காபுரம் மண்டலம், தரிமடுகு, குரிச்செடு மண்டலம், தேஷினேனி பல்லி, அர்த்தவீடு மண்டலம், மாவுட்டூர், கம்பம் மண்டலம், ஜங்கங்குண்ட்லா கிராமங்களுக்கு குலதெய்வம் முறைப்படி நிச்சயம் செய்த தம்பதியினர் திருமண நாளில் மணமகன் மணமகள் கோலத்திலும் மணமகள் மணமகன் கோலத்திலும் உடை அணிந்து வந்து குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வது வழக்கம். பாரம்பரியமாக பல்வேறு ஆண்டுகளாக இந்த முறையை அந்த கிராம மக்கள் கையாண்டு வருகின்றனர்.

குறிப்பாக மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் திருமணத்தன்று முறைப்படி பெண் வேடமிட்டு தாலி கட்ட வேண்டும். நாட்டில் எவ்வளவு நாகரிகங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த கிராமங்களில் இதுபோன்ற திருமணம் நடப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, பெத்த அறவேடு மண்டலம் செர்லோபள்ளி கிராமத்தில் நடைபெற்ற திருமணம் தான் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement:
SHARE

Related posts

ஒலிம்பிக்; ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்திய ஹாக்கி அணி

Saravana Kumar

தொழில் வளர்ச்சிக்கு சிறப்பு செயல்திட்டம் வகுக்கப்படும் – மு.க. ஸ்டாலின்

Gayathri Venkatesan

ஒரு சில நாட்களில் வீடு திரும்புவார் நடிகர் ரஜினிகாந்த்; தனியார் மருத்துவமனை தகவல்

Halley karthi