முக்கியச் செய்திகள் கொரோனா

ஒரே நாளில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 1,359 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,75,592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 35,754 ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,473 பேர் ஒரே நாளில் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,23,459 ஆக உள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றுக்கு 16,379 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்களைப் பொறுத்தவரை சென்னையில் 169 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 140, செங்கல்பட்டில் 103 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களில் 100க்கும் குறைவானோரே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

பாராட்டிய மு.க.ஸ்டாலின்; கண் கலங்கிய துரைமுருகன்

Saravana Kumar

மக்களை அச்சுறுத்தி வந்த கரடி பிடிபட்டது

Ezhilarasan

சண்டைக் காட்சியில் திடீர் விபத்து: நடிகர் விஷால் படுகாயம்

Gayathri Venkatesan