கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்த நிலையில் தற்போது…

நடிகர் ரஜினிகாந்த், இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் ஐதராபாத்தில் நடைபெற்ற ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்த நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது டோஸ் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.

இதை நடிகர் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும், கொரோனா வைரஸுக்கு எதிரான இந்த யுத்தத்தை ஒன்றாக எதிர்த்துப் போராடி வெற்றி பெறுவோம் எனவும் சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.