6 லட்சத்து 16 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் சென்னை வந்தன!

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன. தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக…

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நேரடி கொள்முதல் மூலம் இன்று 6 லட்சத்து 16 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன.

தமிழ்நாட்டில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவன தயாரிப்பில் உருவாக்கப்பட்ட கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று காலை ஹைதராபாத்திலிருந்து புளூ டார்ட் விமானம் மூலம் 24 பார்சல்களில் 1 லட்சத்து19 ஆயிரத்து 20 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தன.

தொடர்ந்து, நண்பகலில் புனேவில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் 42 பெட்டிகளில் 4 லட்சத்து 97 ஆயிரத்தி 640 கோவீஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன. இந்த தடுப்பூசி மருந்துகளை பெற்றுக்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.