முக்கியச் செய்திகள் தமிழகம்

மு.க.ஸ்டாலினின் வெற்றியை பதிவு செய்து வாழ்த்திய சர்வதேச ஊடகங்கள்!

தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ள திமுக குறித்தும் மு.க.ஸ்டாலின் குறித்தும் சர்வதேச ஊடகங்கள் வாழ்த்தி எழுதியுள்ளன.

தமிழகத்தில் கடந்த மே 2ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் திமுக 133 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மை ஆட்சியை அமைக்கவுள்ளது. 

இந்நிலையில் சர்வதேச ஊடகமான ஸ்புட்னிக் இதுகுறித்து செய்தி வெளியிட்டு வாழ்த்தியுள்ளது. ஸ்புட்டின் ரஷ்யாவின் அரசு ஊடகமாகும். இடதுசாரி சிந்தனையாளரும், சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபருமான ஜோசப் ஸ்டாலினின் பெயரை வைத்த அரசியல்வாதி ஒருவர் மாநிலத்தின் முதல்வராவது இதுவே முதல்முறை என்றும் அந்த செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் ஊடகத்தைத் தொடர்ந்து, மற்றொரு தனியார் சர்வதேச செய்தி ஊடகமும் இது குறித்து எழுதியுள்ளது. எப்படியாயினும் திமுகவுடன் தமிழகத்தில் இடதுசாரிகள் கூட்டணி வைத்தே தேர்தலை எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

மும்பை ரயில் நிலையத்தில் குவிந்த புலம்பெயர் தொழிலாளர்கள்!

Karthick

உத்தரகாண்ட் மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு!

Karthick

டெல்லி அணி சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி!

Ezhilarasan