3-வது அலையை எதிர்கொள்ளத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர்

கொரோனா மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டிற்கு…

கொரோனா மூன்றாவது அலையையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்ட ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த அவர், தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை ஆயிரத்து 737 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

45 ஆயிரம் மருந்துகள் தேவைப்படும் சூழலில் 11 ஆயிரம் மருந்துகள் மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து கிடைத்துள்ளதாகவும், தற்போது 4 ஆயிரம் மருந்துகள் மட்டுமே கையிருப்பில் உள்ளதது.

கொரோனா 3-வது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவர் என்ற தகவல் வெளியானதையடுத்து, அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை பிரிவு துவங்கப்பட்டுள்ளதாக” மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.