புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக பாஜக எம்.எல்.ஏ செல்வம் போட்டியின்றி தேர்வானார்.
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக சார்பில், சபாநயாகர் வேட்பாளராக பாஜகவைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் செல்வம் முன்னிறுத்தப்பட்டார். இவரை முதலமைச்சர் ரங்கசாமி முன்மொழியவும், பாஜக சட்டப்பேரவை கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழியவும், சட்டப்பேரவை செயலர் முனுசாமியிடம் வேட்புமனுவை செல்வம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் சபாநாயகர் தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் எவரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், செல்வம் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை கூடும் சட்டப்பேரவைக் கூட்டத்தில், தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் முறைப்படி அறிவிக்கவுள்ளார்.







