அதிகரிக்கும் கொரோனா; சிகிச்சையில் 7.23 லட்சம் பேர்

நாடு முழுவதும் 1,79,723 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 12.5% அதிகமாகும். நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில்…

நாடு முழுவதும் 1,79,723 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய பாதிப்பை விட இது 12.5% அதிகமாகும்.

நாடு முழுவதும் குறைந்து வந்த கொரோனா தொற்று சமீப நாட்களாக தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இன்று 1,79,723 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினசரி பாதிப்பு விகிதம் 13.29%ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதேபோல 46,569 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 3,45,00,172 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்புகளை பொறுத்த அளவில் 146 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 4,83,936 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 7,23,619 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த சூழலில் நாடு முழுவதும் முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டோர்கள் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.

அதேபோல ஒமிக்ரான் தொற்றை பொறுத்த அளவில், நாடு முழுவதும் 4,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,552 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 2,481 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,216 பேரும், ராஜஸ்தானில் 1,216 பேரும், டெல்லியில் 513 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.