தமிழ் திரையுலகில் முன்னனி நடிகராக விளங்கும் சிம்புவிற்கு, வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.
நடிப்பு, இயக்கம், பாடல் என பல்வேறு துறைகளில் நடிகர் சிம்பு சாதனைப் படைத்து வருவதால் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளதாக வேல்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. அதன்படி, சென்னை பல்லாவரத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கினார். இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கனேஷ் என்பதால், அந்த படத்திற்கும் இந்த பட்டமளிப்பிற்கும் எந்த ச்மபந்தமும் இல்லை எனவும் ஐசரி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின்போது தடகள விளையாட்டு வீரர் மாரியப்பன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம் ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
இதுவரை டாக்டர் பட்டத்தை பெற்ற எம்.ஜி.ஆர், சிவாஜி, கமலஹாசன், நாசர், பிரபு, விஜயகாந்த், விவேக், விஜய் மற்றும் விக்ரம் ஆகிய தமிழ் திரையுலக பிரபலங்கள் வரிசையில் தற்போது சிலம்பரசன் டாக்டர் பட்டம் பெற்று இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.







