தனியார் பரிசோதனை மையங்களில் மேற்கொள்ளப்படும் ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், தனியார் பரிசோதனை மையங்களில் முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம், ரூ.800 ரூபாயில் இருந்து ரூ. 550 -ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா மாதிரிகளுக்கு ( Pooled Samples ) ரூ .600-லிருந்து ரூ .400 -ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்ட பயனாளிகளாக இல்லாதவர்கள், தனியார் பரிசோதனை மையங்களில் ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் 1,200 ரூபாயில் இருந்து 900 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீட்டிற்கே வந்து ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனை செய்ய, கூடுதலாக 300 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத தனியார் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட RT – PCR பரிசோதனைகளுக்கான தொகையினை யுனைடெட் இந்தியா காப்பீடு நிறுவனம் ( UIIC ) மறுபரிசீலனை செய்த பிறகு மீள வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.







