செய்திகள்

மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை!

பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 10 மாதங்களுக்குப் பின் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.கொரோனா நோய்த்தொற்று அபாயம் காரணமாக பல்வேறு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை தொடங்கி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள 9,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, சுகாதாரத்துறை பணியாளர்கள் நேரடியாக சென்று 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்றைக் கண்டறியும் RT – PCR சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

மாணவர்கள் & ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், நோய்த்தொற்று அறிகுறியைக் கண்டறிவதற்காக தொடர்ச்சியாக ஒரு வார கால இடைவெளியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கொரோனா சிகிச்சை மையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு

Halley Karthik

மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

Halley Karthik

மக்களவைத் தேர்தலைப் போல திமுக கூட்டணி வெற்றி பெறும் : மு.க.ஸ்டாலின்

Halley Karthik

Leave a Reply