தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 922 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்தும் குறைந்தும் பதிவாகி வந்தது. ஆனால் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 35 லட்சத்து 55 ஆயிரத்து 538 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்து கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்பதால், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 33 என்ற கணக்கில் நீடித்து வருகிறது. ஒரேநாளில் ஆயிரத்து 252 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 8 ஆயிரத்து 919-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஒரேநாளில் 24 ஆயிரத்து 945 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அதிகபட்சமாக சென்னையில் 186 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 98 பேருக்கும், செங்கல்பட்டில் 76 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
– இரா.நம்பிராஜன்