முக்கியச் செய்திகள் தமிழகம்

“கட்சியை விட்டு சென்றவர்கள் உதிர்ந்த முடியை போன்றவர்கள்” – எடப்பாடி பழனிசாமி

கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்றவர்கள், உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஓமலூரில் அதிமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவில் இருக்கும் உண்மை தொண்டர்கள் யாரும் எதிரி கட்சிக்கு செல்ல மாட்டார்கள், அதிமுகவின் உண்மை தொண்டன் எல்லாம் சொக்கத்தங்கம். கட்சியை விட்டு சென்றவர்கள் எல்லாம் தலையிலிருந்து உதிர்ந்த முடியை போன்று. உதிர்ந்த முடி ஒன்றுக்கும் உதவாது” என்று கூறியுள்ளார்.

மேலும், “அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி இன்னும் சிறப்பாக உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.” என்றும் கூறியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

18 வயது நிரம்பாத இஸ்லாம் சிறுமிக்கு திருமணம் செய்யத் தடையில்லை!

Jayapriya

கடன் தொல்லையால் விஷம் அருந்தி தற்கொலை செய்த இளைஞர்!

Jeba Arul Robinson

கொரோனா பரவல் எதிரொலி; முதல்வர் அவசர ஆலோசனை

Saravana Kumar