முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடற் பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உடலை ஆரோக்கியத்துடன் பேணி காப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று இளைஞர்களுக்கு முன்னோடியாக இருக்கும் வகையில் இந்த வீடியோ உள்ளது.
இளம் வயதில் கிரிக்கெட் விளையாட்டு வீரராக இருந்த ஸ்டாலின், பின்னர் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். காலையில் கட்சி நிர்வாகிகளுடன் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், மிதிவண்டி பயிற்சியை மேற்கொண்டு வந்தார். மகள், மருமகனுடன் நீண்ட தொலைவு சைக்கிளிங் மேற்கொண்ட போது எடுத்த படங்கள், காணொலிப்பதிவுகள் வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த வயதிலும் அவர் உடற் பயிற்சிக் கூடத்தில் உடற் பயிற்சி மேற்கொள்ளுவது வியப்புடன் சமூக ஊடகங்களில் கருத்துகளாக பதிவு செய்யப்படுவதுடன், காணொலியும் வைரலாகியும் வருகிறது.







