கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார்.
தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த காலத்திற்குள்ளாக இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து தடுப்பூசி செயல்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா வார்டுகளை முன்னெச்சரிக்கையுடன் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், ஆக்ஸிஜன் படுக்கைகள், தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், மருந்துகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா உருமாற்றம் அடைந்துள்ளதா என்பதை கண்டறிய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ள ராதாகிருஷ்ணன், தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார்.








