காங்கிரஸ் போராட்டம்- ஜோதிமணியை குண்டுகட்டாக கைது செய்த போலீசார்

ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக அழைப்புவிடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜோதிமணி எம்பியை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.  நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 2 நாட்ளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த…

ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக அழைப்புவிடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய ஜோதிமணி எம்பியை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். 

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் தொடர்ந்து 2 நாட்ளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை நேற்று இரவு 9 மணிக்கு நிறைவடைந்தது. 2-வது நாளான நேற்று 8½ மணி நேரம் விசாரணை நடந்தது.

இதற்கிடையில் இன்று மூன்றாவது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரில் ஆஜராகிரார். கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி 18 மணி நேரத்திற்கு மேலாக விசாரணைக்கு ஆஜராகி விளக்கமளித்த நிலையில் இன்றும் ஆஜராகி ராகுல் காந்தி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, காலை 10 மணியளவில் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் புறப்படும் ராகுல்காந்தி மூத்த தலைவர்களை சந்தித்த பின்னர் அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

இந்த விசாரணைக்காக, அமலாக்கத்துறை அலுவலகத்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. சி.ஆர்.பி.எப். படையினர், கலவர தடுப்பு போலீசார், டெல்லி போலீசார் ஆகியோர் பெருமளவு குவிக்கப்பட்டு இருந்தனர். அணுகுசாலைகள் அனைத்தும் தடுப்புகளால் மறைக்கப்பட்டு இருந்தன.

நேஷ்னல் ஹெரால்ட் வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை ஆஜராக அமலாக்கத்துறை அழைத்ததிற்கு எதிர்த்து தெரிவித்து தொடர்ந்து 3-வது நாளாக நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

3வது நாளாக தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற காங்கிரஸ் எம்பி.க்கள் , நிர்வாகிகள் உள்ளிட்டோரை கைது செய்தது காவல்துறை எதிர்ப்பு போராட்டம் நடத்த முயன்ற தமிழக எம்.பி. ஜோதிமணி உள்ளிட்டோரை குண்டுகட்டாக தூக்கி காவல்துறை  போராட்டத்தை தடுத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.