திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில், 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பயிலும் பத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டம் துவாக்குடியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் புத்தாண்டு…

திருச்சி தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் பயிலும் பத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் புத்தாண்டு விடுமுறை முடிந்து வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் வெளிமாநில மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் 577 மாணவ மாணவியர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பத்து மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில், அவர்களின் ரத்த மாதிரிகள் ஒமிக்ரான் பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.