ஒரு சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான்: பிரதமர்

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி…

நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணோலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

அதில் பேசிய அவர், தொற்று அதிகம் உள்ள இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு சமீபத்தில் ஒதுக்கிய 23 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை கொண்டு, அந்தந்த மாநிலங்களின் சுகாதாரத்துறையை வலுப்படுத்தப் பயன்படுத்தும் படி அறிவுறித்தினார்.

நாட்டில் கடந்த சில நாட்களில் பதிவாகும் கொரோனா பாதிப்புகள், சுமார் 80 சதவீதம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் இருந்தே பதிவாகிறது. ஆகையால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் மேலும் எதிர்வரும் 3ஆம் அலையை, கொரோனா பரிசோதனை, தொடர் கண்காணிப்பு, சிகிச்சை மற்றும் தடுப்பூசி மூலம் தடுக்காலாம் எனக் கூறயவர், நாட்டில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தாலும் அது கவலைக்குரியதுதான் எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிரதமர், தொற்று அதிகம் உள்ள பகுதிகளைச் சிறு கட்டுப்பாட்டுப் பகுதிகளாகப் பிரிக்க அறிவுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.