முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 197 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 26,727 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவில் மட்டும் 13,834 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 3,37,91,061 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 197 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,573 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 25,455 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,30,68,599 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றுக்கு 2,73,889 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 89,74,81,554 பேருக்கும், கடந்த 24 மணி நேரத்திலும், 69,33,838 பேருக்கும் தடுப்பூசி  செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement:
SHARE

Related posts

சீனாவில் ஊர் சுற்றும் யானைக் கூட்டம்: வைரல் புகைப்படங்கள்!

Gayathri Venkatesan

ஸ்டாலினால் கனவுதான் காணமுடியும்:முதல்வர்

எல்.ரேணுகாதேவி

“தங்க மகளாக திரும்பி வர வேண்டும்”-அமைச்சர் வாழ்த்து

Halley karthi