முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐபிஎல்: வலுவான சிஎஸ்கே-வை இன்று எதிர்கொள்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ்

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ் தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரண்டாவது போட்டி யில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 புள்ளிகளுடன் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு சென்று விட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது. அந்த அணி அடுத்த 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று ரன் ரேட்டிலும் முக்கியமான இடத்தில் இருந்தால் தான் பிளே ஆப் சுற்றுக்குச் செல்ல முடியும். இன்று நடக்கும் போட்டியில் தோற்றால், அந்த அணியால் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியாது. ராஜஸ்தான் அணியில் கேப்டன் சஞ்சு சாம்சன், லெவிஸ் ஆகியோரைத் தவிர, மற்றவர்கள் யாரும் சோபிக்கவில்லை. பந்துவீச்சி லும் அந்த அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர்கள் பாப் டு பிளிஸ்சிஸ், ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். மொயீன் அலி, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். பந்து வீச்சில் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர், ஜடேஜா , பிராவோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தோனியின் கேப்டன்ஷிப், அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்கிறது.

ஏற்கனவே நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீழ்த்தியிருப்பதால், இந்தப் போட்டியில் அந்த அணியை எளிதாக வெல்லும் என்று கூறப்படுகிறது.

Advertisement:
SHARE

Related posts

’லவ் யூ சார்..’ லிங்குசாமியை அப்படி பாராட்டும் பிரபல ஹீரோ!

Gayathri Venkatesan

கிருஷ்ணகிரியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

Halley karthi

வைரமுத்து புகழ் மகுடத்தில் மேலும் ஒரு வைரம்: முதல்வர் புகழாரம்!