முக்கியச் செய்திகள் கொரோனா தமிழகம்

புதிதாக 1,587 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் புதிதாக 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழு வதும் ஒரே நாளில், 1,59,772 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இதில் 1,587 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை 26,27,365 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றில் இருந்து ஒரே நாளில் 1,594 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,76,112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,073ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக 179 பேருக்கு புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தொற்றுக்கு
சிகிச்சை பெற்று வந்தவர்களில் 153 பேர், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

கோவையில் 232 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோட்டில் 117 பேருக்கும், செங்கல்பட்டில் 115 பேருக்கும் புதிதாகத் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு பதிவாகவில்லை. அதிகபட்சமாக  சென்னை, செங்கல்பட்டு, சேலம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

மருத்துவ அவசர நிலை அறிவிக்கும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கு இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்!

Jeba Arul Robinson

காதல் ஜோடி தற்கொலை முயற்சி: காதலி பரிதாப உயிரிழப்பு!

Jeba Arul Robinson

உ.பி முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்கு வென்டிலேட்டர் சிகிச்சை

Gayathri Venkatesan