முக்கியச் செய்திகள் விளையாட்டு

சொன்னதை செய்த கூல் கேப்டன்; 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை

துபாயில் நடைபெறும் 14வது ஐபிஎல் இறுதி போட்டியில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி. இதன் மூலம் ஏற்கெனவே “சென்னை வலிமையாக மீண்டும் திரும்பும்” என கூறிய தன்னுடைய வாக்கை தோனி நிறைவேற்றியுள்ளார்.

துபாயில் நடைபெற்ற ஐபிஎல் இறுதி போட்டியில், முதலில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்த கொல்கத்தா பந்து வீச்சில் மிரட்டியது.

சென்னையை பொறுத்த அளவில், முதலில் களமிறங்கிய ருதுராஜ் மற்றும் டு ப்ளஸி அதிரடியாக ஆடினர். ருதுராஜ் 27 பந்துகளில் 3 பவுண்ட்ரி மற்றும் 1 சிக்சர் என மொத்தம் 32 ரன்களை குவித்து சுனில் நரைன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

 

ஆனால் டு ப்ளஸி பொறுமையாக ஆடினார். ஃபெர்குசன் வீசிய 11வது ஓவரில் டு ப்ளசி 2 பவுண்ரி என மொத்தமாக 7 பவுண்ட்ரியும், 3 சிக்ஸர்களையும் விளாசியுள்ளார். மட்டுமல்லாது டு ப்ளசிக்கு இது 100வது ஐபிஎல் போட்டியாகும். இதில் அரைசதம் விளாசி சதத்தை நோக்கி முன்னேறினார்.

 

ருதுராஜ்க்கு பின்னர் களமிறங்கிய உத்தப்பா, தனது 7,000 ரன்களை நோக்கி முன்னேற தொடங்கினார். இந்த போட்டியில் 55 ரன்களை எடுத்தால் டி20 போட்டிகளில் 7,000 ரன்களை குவித்த சாதனையை பெறுவார். ஆனால், நரைனின் 13வது ஓவரில் தொடக்கத்தில் தனது 3வது சிக்ஸரை விளாசிய உத்தப்பா அதே ஓவரில் 3வது பந்தில் எல்பிடபள்யு முறையில் அவுட்டானார். மொத்தமாக 15 பந்துகளில் 35 ரன்களை குவித்து வெளியேறினார் உத்தப்பா.

பவுலிங்கை பொறுத்த அளவில், நரைன் 4 ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி 26 ரன்களை கொடுத்துள்ளார். கடைசி ஓவர் வீசிய மாவி அதிரடியாக தனது பவுலிங்கை வெளிப்படுத்தினார். அவர் மொத்தமாக வீசிய 4 ஓவர்களில் 32 ரன்களை கொடுத்து 1 விக்கெட்டை எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் 7 ரன்களை மட்டுமே கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 192 ரன்கள் குவித்தது.

193 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி, தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கத்திலேயே 1.3வது ஓவரில் ஹேசில்வுட் வீசிய பந்தில் வெங்கடேஷ் அவுட் ஆகியிருந்திருப்பார். ஆனால் தோனி அந்த கேட்சை மிஸ் செய்துவிட்டார்.

 

தொடர்ந்து அதிரடியாக ஆடிய கில் மற்றும் வெங்கடேஷ் ஜோடி தலா 50 ரன்களை குவித்தனர். 10வது ஓவரில் ஜடேஜா பந்தில் கில் தூக்கியடிக்க கேட்ச் மாட்டியது. ஆனால் அந்த பந்து மேலே சென்ற கேபிளில் படவே அது நாட் அவுட்டாக அறிவிக்கப்பட்டது. இதனால் சென்னைக்கு ராசியில்லை என ரசிகர்கள் புலம்பத்தொடங்கினர்.

ஆனால், 10.4வது ஓவரில் தாக்கூரின் பந்தை வெங்கடேஷ் தூக்கியடிக்க ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து 11வது ஓவர் முடிவில் தாக்கூர் பந்தில் வெங்கடேசை அடுத்து களமிறங்கிய ராணா கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் அப்போது அணியின் ரன் 93-2 என்கிற அளவில் இருந்தது.

இதனையடுத்து 11.3வது ஓவரில் ஹேசில்வுட் வீசிய பந்தில் நரைன் ஜடேஜாவுடன் கேட்ச் கொடுத்து 2 பந்துகளில் 2 ரன்களிலேயே வெளியேறினார். ஆனால், கில் 50 ரன்களை 40 பந்துகளில் விளாசினார்.

இதனைத்தொடர்ந்து சாஹரின் 13.2 ஒவர் பந்தில் கில் எல்பிடபள்யு முறையில் 51 ரன்கள் சேர்த்த நிலையில் அவுட் ஆனார். இதன் பின்னர் 13.3 வது ஓவரில் தினேஷ் கார்த்திக் இறங்கியவுடனேயே சிக்ஸ் அடித்தார். ஆனால், ஜடேஜாவின் 14.5வது ஓவரில் தினேஷ் கார்த்திக் 7 பந்துகளில் 9 ரன்களை எடுத்து கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன் பின்னர் களமிறங்கிய ஷகிப், 15 ஓவர் முடிவில் டக் அவுட்டானார்.

அடுத்து இறங்கிய திரிப்பாட்டி, தாக்கூரின் 15.4 ஓவரில் மொயின் அலியிடம் கேட்ச் கொடுத்து 2 பந்துகளில் 2 ரன்களுடன் அவுட் ஆனார். மேலும், ஹேசில்வுட்டின் 16.5 ஓவரில் மோர்கன், சாஹரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்த கேட்ச் சிறப்பான கேட்ச். சிக்ஸருக்கான பந்தை சாஹர் பவுண்ட்ரி எல்லையில் நின்று கேட்ச் பிடித்து அசத்தினார்.
19வது ஓவரில் தொடர்ச்சியாக நோ பால், வைடு, ப்ரீ ஹிட் என சாஹர் மோசமான பந்து வீச்சை கொடுத்தார். இறுதியாக ப்ரவோவின் இறுதி ஓவரில் மாவி சாஹரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இறுதியாக ஒரு பந்து மிச்சமிருந்தது. அதில் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.

இறுதியாக சென்னை 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முன்னதாக கடந்த 2020 ஐபிஎல் தோல்விக்கு பின்னர் பேசிய தோனி, “சென்னை வலிமையுடன் மீண்டும் களத்திற்கு திரும்பும்” என தெரிவித்திருந்தார். அந்த வாக்கை தற்போது அவர் நிறைவேற்றியுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

ராணுவ விமானப் பிரிவில் விரைவில் பெண் விமானிகள்; ராணுவத்தலைமை தளபதி நரவானே தகவல்!

Saravana

போரில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாரட்டுவிழா!

Halley karthi

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

Vandhana