சென்னை கொளத்தூரில் குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் நாளை (நவ. 14) குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கேக் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். இதற்காக ரூ.9.27 கோடியில் டெண்டர் விடப்பட்டு, கேக்குகள் தயாரிக்கப்பட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடையில் கொள்முதல் செய்யப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 கேக் துண்டுகள் வழங்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 2.90 லட்சம் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு கேக் வழங்கும் திட்டத்தை சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ரமணா நகர் பகுதியில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் (CMS) முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு கேக் மற்றும் வாழ்த்து அட்டைகளை வழங்கித் தொடங்கி வைத்தார்.
முதலமைச்சர் விஜய் மாணவர்களுக்கு வழங்கிய வாழ்த்து அட்டையில், “ஆல் இஸ் வெல், கான்ஃபிடெண்ட்டா இருங்க, பிரியமுடன் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் உடனிருந்தானர்.




