ஒவ்வாத பழமைவாதங்களும், மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகிறது:முதலமைச்சர்

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளேடு நடத்திய “Think Edu-2022” கருத்தரங்கில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டர். முன்னதாக “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்”. நிறுவனத்திற்கு தன் பாராட்டுக்களை…

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில நாளேடு நடத்திய “Think Edu-2022” கருத்தரங்கில் காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டர்.

முன்னதாக “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்”. நிறுவனத்திற்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்ட முதலமைச்சர் பேசியதாவது, அனைவருக்கும் கல்வி என்ற முன்னெடுப்பை முதன்முதலில் பெரிய அளவில் செயல்படுத்தியது நமது தமிழ்நாடுதான். அத்தகைய சமூகநீதி விளைந்த மண் இது! . நீதிக்கட்சித் தலைவர்கள், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர் எனத் தொடர்ந்து வந்த முதலமைச்சர்கள் அனைவருமே மாணவர்களை கல்விச் சாலைகளுக்கு அழைத்து வந்தார்கள். கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கினார்கள். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கல்வி சென்று சேர்ந்தால்தான் தமிழ்நாடு வளர்ச்சி பெறும் என்ற தொலைநோக்குப் பார்வை அவர்களுக்கு இருந்தது.

இன்று தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பொறியாளர்களும் தலைசிறந்த மருத்துவர்களும் உருவாகியுள்ளனர் என்றால் அதற்கு வித்திட்டது திராவிடப் பேரியக்கமும், ஒப்பில்லாத் தலைவரான முத்தமிழறிஞர் கலைஞரும்தான்! படிப்பதற்கே தகுதி வேண்டும் என்று தடைக்கற்களைப் போட்ட சமூகத்தில், படித்தால் தகுதி தன்னால் வந்துவிடும் என்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பெற்றுத் தந்தோம். இன்று நீட் என்ற பெயரில் தகுதி என்ற தடைகலைப் போடுகிறார்கள். அதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறோம். அந்தத் தடைக்கல்லும் தூக்கியெறியப்படும் என்று குற்றம்சாட்டினார்.


மேலும் பேசிய அவர் , கடந்த எட்டு ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசின்கீழ் கல்வி மிக மோசமாகச் சீரழிக்கப்பட்டுள்ளது. அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் ஒவ்வாத பழமைவாதங்களும் மூடக்கருத்துகளும் கல்வியில் திணிக்கப்படுகிறது என்று தெரிவித்த அவர், கல்விச் சாலைகளில் மாணவர்களின் நெஞ்சில் மதவாத நஞ்சைக் கலக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

இந்த நாட்டில் உள்ள அறிவார்ந்தோரும் ,மனச்சாட்சி உள்ளோரும், நடுநிலையாளர்களும் ,கல்வியாளர்களும் அறச்சீற்றத்தோடு துணிச்சலோடு கேட்க வேண்டிய கேள்வி! இதுபோன்ற கல்விக் கருத்தரங்குகளில் நம் நாட்டின் கல்வியைச் சூழ்ந்துள்ள இதுபோன்ற தீமைகளை ஒழிக்கப் பாடுபட வேண்டியது குறித்து ஆக்கப்பூர்வமாக விவாதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், கல்வி என்பது இந்த நாட்டின் சொத்து! ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் உரிமை! என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.