சவூதி அரேபியாவின் அல்நஸர் அணியுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கையெழுத்திடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர்ச்சுக்கல்லின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து இலவச முகவராக இருந்தார். பியர்ஸ் மோர்கனுடனான சர்ச்சைக்குரிய நேர்காணலுக்கு பின்னர் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்பின்னர், அவரை பல கிளப் அணிகள் ஒப்பந்தம் செய்ய போட்டியிட்டன. எனினும் சவூதி அரேபியாவின் கிளப் அணி அவரை ஒப்பந்தம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் நட்சத்திர கால்பந்து வீரர் மற்றும் போர்ச்சுக்கல் அணியின் கேப்டனுமான கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய கிளப்பில் ஒப்பந்தம் செய்யவுள்ளார். சவுதி அரேபியாவின் அல் நஸ்ர் எனும் கிளப்பிற்காக 2025ம் ஆண்டு வரை ஒப்பந்தம் கையெழுத்திடவுள்ளார். இதற்காக அவருக்கு 200 மில்லியன் யூரோக்களை (1,775 கோடி இந்திய மதிப்பில்) சவுதி அரசு கொடுக்க உள்ளது.
2025 பிறகு அந்த அணியின் தூதுவராக செயல்பட போவதாக, போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மார்கா எனும் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. நாளை ஜனவரி ரொனால்டோ ஒப்பந்த கையெழுத்திற்காக சவுதி செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.