இந்தியாவில் தொடரும் குழந்தை திருமணங்கள் – என்ன சொல்கிறது ஆய்வறிக்கை?

20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை,…

20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் தேசிய குடும்ப நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வின் அறிக்கை, பொருளாதார ஆலோசனை குழுவில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், நாட்டில் உள்ள 313 மாவட்டங்களில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 20 சதவீதத்திற்கும் அதிகமானோர் 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் 18 வயதிற்குள் திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் விருப்பத்தேர்வு மூலம் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையில், அதிகபட்சகமாக புதுச்சேரி 86.2 சதவீதமாகவும், டெல்லி 84.6 சதவீதமாகவும், தமிழ்நாடு 82.5 சதவீதமாகவும் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார், குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் விருப்பத்தேர்வு மூலம் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2015 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை, 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை 26.8 சதவீதமாக இருந்த நிலையில், 2019- 21ல் 23.3 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 18 வயதுக்கு முன் திருமணம் செய்து கொண்ட பெண்களின் சதவீதம், நகர்ப்புற இந்தியாவில் 17.5 சதவீதத்தில் இருந்து 14.7 சதவீதமாக குறைந்துள்ளதும் ஆய்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.