தொட்டபெட்டா பள்ளத்தாக்கு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி: வனத்துறையினர் ஏற்பாடு

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு காட்சி முனையில், வனத்துறையினர் சார்பில் 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சர்வதேச சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வருவதுதான்…

தொட்டபெட்டா பள்ளத்தாக்கு காட்சி முனையில், வனத்துறையினர் சார்பில் 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

சர்வதேச சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான சுற்றுலாத் தளமாக விளங்கி வருவதுதான் நீலகிரி மாவட்டம் உதகையில் அமைந்துள்ள மிக உயரமான தொட்டபெட்டா மலை சிகரம். இந்த தொட்ட பெட்டா மலையானது கடல் மட்டத்தில் இருந்து 8,650 அடி உயரத்தில் உள்ளது. அதிலும் மிக அடர்ந்த வனப்பகுதியைக் கொண்ட மலையாகும். தமிழகத்தின் மிக உயர்ந்த சிகரம் என்றும், தென்னிந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மலை என்றும் கூறப்படுகிறது.இந்த மலையில் இருந்து சாமுண்டி மலை அழகை கண்டு ரசிக்கலாம்.

அந்த அளவிற்கு மிகவும் புகழ் வாய்ந்த இந்த தொட்டபெட்டா மலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள காட்சி முனையை கண்டு ரசிக்க இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதற்கிடையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கோவையை தடாகம் சேர்ந்த 62 வயதுடைய லீலாவதி என்ற மூதாட்டி தடுப்பு வேலிகளைத் தாண்டி 200 அடி பள்ளத்தில் குதித்து உயிரிழந்தார். இதனையடுத்து, தொட்டபெட்டா சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை, பள்ளத்தாக்கு காட்சி முனை பகுதிக்கு அனுமதிக்காமல் வழியை சுற்றுலா வளர்ச்சி கழகம் அடைத்தது.

இதனால் தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் தொலைநோக்கி மூலம் மட்டுமே இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து வந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் தூங்கவுள்ளதால் உரிய பாதுகாப்புடன் தொட்டபெட்ட பள்ளத்தாக்கு காட்சி முனைக்கு அனுமதிக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு கோரிக்கை
விடுத்தனர்.

இந்த நிலையில் வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள தொட்டபெட்டா மலை சிகரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள், பாதுகாப்புடன் பள்ளத்தாக்கு பகுதியை கண்டு ரசிக்கும் வகையில், 80 மீட்டர் நீளத்திற்கு, 7 அடி உயரம் கொண்ட தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.