கேரள மாநிலம் இடுக்கி அருகே கேரள அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 10க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து மூணாறு நோக்கி சென்ற அரசு பேருந்து இடிக்கி அருகே நேரிமங்கலம் பகுதியில் செல்லும் போது திடீரென நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி : “இந்தியா ஜனநாயகத்திலிருந்து மாறி வருகிறது” – பிரதமருக்கு கடிதம் எழுதிய எதிர்க்கட்சி தலைவர்கள்
இதில் ஓட்டுநர், நடத்துனர் உட்பட20 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததில் 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் விபத்துக்கான் காரணம் குறித்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.