கட்டுமான பொருட்கள் கடையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்

ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மர கதவுகள், பலகைகள்,…

ஈரோட்டில் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.

ஈரோடு பேருந்து நிலையத்திற்கு அருகே தங்கவேல் என்பவருக்கு சொந்தமான மர கதவுகள், பலகைகள், சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இக்கடையின் பின்புறம் குடோன் ஒன்றும் உள்ளது.

இந்நிலையில், நள்ளிரவில் கடை மற்றும் குடோனிலிருந்து திடீரென புகை வெளியேறிய நிலையில், மளமளவென தீ முழுவதும் பரவியது. இதில், கடை மற்றும் குடோனில் இருந்த தேக்கு மரங்கள் உட்பட பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். மின் கசிவினால் தீப்பற்றியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.