முக்கியச் செய்திகள் விளையாட்டு

கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும் – பிரதமர் மோடி

கூட்டு முயற்சிதான் கொரோனாவை வீழ்த்தும் என நாட்டு மக்களுக்கு வானொலி மூலம் உரையாற்றிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிரன்றும் வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே உரையாயாற்றி வருகிறார். அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சியில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா வைரஸ் நம் வீட்டின் கதவுகளை தட்ட தொடங்கியுள்ளது என கூறினார். கொரோனாவின் புதிய உருவமான ஒமைக்ரான் வைரசை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டும் எனக் கூறிய பிரதமர், கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் இந்தியா சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 14 வீரர்கள் உயிரிழந்த நிகழ்வு தனது மனதை மிகவும் பாதித்திருப்பதாக கூறினார். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் ஒட்டுமொத்த தேசத்திற்கும் உந்து சக்தியாக இருந்தார் என பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்து வருண் சிங் சிகிச்சை பெற்றபோது, சமூக வலைதளங்களில் வெளியான அவரது கடிதம் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு வழங்கிய சவுரிய சக்கரா விருது குறித்து வருண் சிங், அவரது தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம், வெற்றியின் உச்சத்தை அடைந்த போதும் வருண் சிங், தனது அடித்தளத்தை மறக்கவில்லை என சுட்டிக்காட்டினார். எதில் நீங்கள் பணியாற்றுகிறீர்களோ அதில் அர்ப்பணிப்புடன் இருங்கள், நம்பிக்கை இழக்காதீர்கள் என பிரதமர் மோடி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

“வீராங்கனை பிரியா மரணத்தில் உண்மையை உரக்கச்சொல்வோம் – ஓரிரு நாளில் அறிக்கை”

NAMBIRAJAN

தமிழகத்தில் முன்கூட்டியே நெல் கொள்முதலுக்கு ஒப்புதல்-திமுக எம்.பி. வில்சன்

Web Editor

ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்: முதல்வர் அறிவிப்பு!

Nandhakumar