தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட்ள்ள பதிவில்,
அரசியலமைப்பு நாள்: தலைவர்களை நினைவுகூர்ந்த முதல்வர் விஜய்!
“இந்திய அரசியலமைப்புச் சட்டம், 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் இந்திய அரசியலமைப்பு நாளான இந்நாளில், இச்சட்டத்தை உருவாக்கியதில் அரும்பங்காற்றிய தலைவர்கள் அனைவரையும் நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.
அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும், ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம்! ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பால் தினம்: பால் உற்பத்தியாளர்களுக்கு வாழ்த்து!
“வெண்மைப் புரட்சி மூலம், நாட்டின் பால்வளத்தைப் பெருக்குவதில் பெரும்பங்காற்றிய டாக்டர் வர்கீஸ் குரியன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் தேசிய பால் தினத்தில், பால் உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பால் உற்பத்தியின் மூலம் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்கும் விவசாயப் பெருமக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நாட்டின் உணவுப் பாதுகாப்பிலும், ஊட்டச்சத்து மேம்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
நமது அரசு, பால் உற்பத்தியாளர்களின் நலனைக் காத்திடும் வகையில் பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தி வழங்கியதோடு, ஊரகப் பகுதிகளில் வாழும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. அவ்வகையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, பால் உற்பத்தியாளர்களின் வாழ்வில் வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கிட நமது அரசு என்றும் துணை நிற்கும்!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





