தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.295-ம் சவரனுக்கு ரூ.2360-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,420 க்கும், ஒரு சவரன் ரூ.91,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று (நவம்பர் 26) ஆபரணத் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,540-க்கும், சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்றைய விலையிலேயே வர்த்தகமாகிறது. அதன்படி, இன்று ஒரு கிராம் ரூ.165-க்கும், ஒரு கிலோ ரூ.1.65 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து குறைந்து வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




