மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் திமுகவினர் வாக்குப் பெட்டியில் முறைகேடு செய்ததாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நகர்ப்புறத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு கொண்டிருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சி இரண்டாவது 2 வார்டு மோகனா சரவணன் என்பவர் அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டு முடிவில் திமுக வேட்பாளர் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுகவினர் வாக்குப் பெட்டியில் முறைகேடு நடத்தியதாக கூறி மதுராந்தகம் – சூனாம்பேடு தேசிய நெடுஞ்சாலையில் மோகனா சரவணன் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலை என்பதால் போராட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசால் ஏற்பட தொடங்கியது.
தகவல் அரிந்து வந்த காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதிகாரிகள் உரிய காரணம் கூறவில்லையெனில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறி கலைந்து சென்றுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







