தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும்: குடியரசுத் தலைவர்

தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார். மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சர்வதேச தாய்மொழி…

தாய்மொழியை பாதுகாப்பதற்கான நடவடிக்கை மக்கள் இயக்கமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் சார்பில் சென்னையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக சர்வதேச தாய்மொழி தினத்துக்கான நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டது. இதில் பங்கேற்று பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு, நாம் நமது தாய் மொழியை இழக்கும் பட்சத்தில், நமது அடையாளத்தையும் இழந்தவர்கள் ஆகிவிடுவோம் என்று அச்சம் தெரிவித்தார்.

அண்மைச் செய்தி: வளர்ச்சிப் பணிகளை காங்கிரஸ் மேற்கொள்ளாது: பிரதமர நரேந்திர மோடி குற்றச்சாட்டு

மேலும், மாற்றத்துக்கு ஏற்ப மொழியை கையாள வேண்டும் என்றும், இளம் தலைமுறையினரிடம் தாய் மொழியை புதுமையான கற்பனை திறனுடன் முன்னெடுத்து செல்லும் வகையிலான வழிகளை கையாள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியா, நூற்றுக்கணக்கான மொழிகளை கொண்ட, ஆயிரகணக்கான பேச்சு வழக்கங்களைக் கொண்டதன் தாயகமாக திகழ்வதாக தெரிவித்தார்.

மேலும், இது போன்ற உயர்ந்த மொழி பாரம்பர்யமானது நமது கருத்துகளுக்கும், கற்பனைதிறனுக்கும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.