ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் சானியா மிர்சாவை களமிறக்கும் காங்கிரஸ்?

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல்…

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவைத் தொகுதியில் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முதல் கட்டமாக தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும்,  புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இதனால், அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : “பாபா ராம்தேவ் மன்னிப்பை ஏற்க முடியாது” – பதஞ்சலி விளம்பர வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் பிஆர்எஸ் 9 தொகுதிகளிலும்,  பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும்,  ஏஐஎம்ஐஎம் ஒரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தெலங்கானா மாநிலத்தில் கடந்தாண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் தனது பலத்தை தக்க வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பிஆர்எஸ் மற்றும் பாஜக 17 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில்,  காங்கிரஸ் 13 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயரை மட்டுமே அறிவித்துள்ளது.

ஹைதராபாத்,  கம்மம் உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை அறிவிக்கவில்லை.  இந்நிலையில்,  பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை களமிறக்க திட்டமிட்டுள்ளது.  தெலங்கானா காங்கிரஸ் தலைவர்கள் அகில இந்திய கமிட்டியிடமும் சானியா மிர்சாவை வேட்பாளராக நிறுத்த ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.