ஜோடோ பாத யாத்திரை தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதற்காக போதிய தொகையை வழங்காததால் காங்கிரஸ் தொண்டர்கள் சிலர் கேரளாவில் காய்கறி வியாபாரிகளைத் தாக்கியுள்ளனர்.
கன்னியாகுமரியில் தொடங்கி இருக்கும் பாரத் ஜோடோ யாத்திரை ,இந்தியாவில் பல்வேறு இடங்களில் இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜோடோ யாத்திரை தமிழகத்தில் முடிந்து கேரளாவில் தொடங்கியுள்ள நிலையில் ,கேரளா கொல்லத்தில் காய்கறி கடையில் ஜோடோ யாத்திரை கட்சியினர் ரூ 2,000 வழங்க வேண்டும் என உரிமையாளரை மிரட்டிக் கேட்டுள்ளனர். கடையின் உரிமையாளர் பணத்தை வழங்க மறுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் சிலர் அவரது கடையை அடித்து நொறுக்கினர். கடையை அடித்து நொறுக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது .இதனைக் கண்ட காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட மூன்று தொண்டர்களை இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் காங்கிரஸ் கட்சி கூறியது. கடையின் உரிமையாளர் எஸ் ஃபவாஸ் ஒரு வீடியோவில் பாரத் ஜோடோ யாத்திரை நிதி வசூல் என்ற பெயரில்,ரூ 2,000 கேட்டார்கள் ஆனால் என்னால் ரூ 500 தான் கொடுக்க முடியும் என்றார் . அதற்கு என்னையும் எனது தொழிலாளர்களையும் காங்கிரஸ் கட்சியினர் தாக்கினர். அது மட்டுமின்றி அவர்கள் காய்கறிகளைத் தூக்கி வீசிப்பட்டு, தனது வாடிக்கையாளர்களை அவதூறாகப் பேசியுள்ளனர். பிறகு காங்கிரஸ் கட்சியினர் என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டியதாக ஃபவாஸ் கூறினார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று கட்சித் தொண்டர்கள் உடனடியாக இடை நீக்கம் செய்யப்பட்டதாகக் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே சுதாகரன் தெரிவித்தார். அவர்கள் செய்த தவறுகளை மன்னிக்க முடியாது. கட்சி தானாக முன்வந்து சிறிய நன்கொடைகளை நிதியளிக்கிறது. ஆனால் பெருநிறுவன நன்கொடைகளைப் பெறுவது போன்று தான் கூறினார். பிறகு காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது இந்தச் செயல் மிகவும் தவறானது இதற்குக் கட்சி கடுமையாக நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.
கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி பல ஆண்டுகளாகக் கூட்டம் கூட்டமாக நிதி திரட்டி வருகிறது. ஆனால் சிறு தொழில் வியாபாரிகளிடம் சிறிய நன்கொடைகள் தான் வசூலிக்கப்பட்டு இருந்தது, ஆனால் இது நடந்திருக்கக் கூடாது. இவை வெளிப்படையாக நடைபெற்றதால் பிசிசி தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் என ஜெயராம் ரமேஷ் கூறினார்.







