பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயணத்தை தொடங்கியவர்,
எம்.ஜி.ஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவரை பற்றி தரக் குறைவாக பேசியதற்கு
எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஓ.பி.எஸ் ஆதரவாளர்
வா.புகழேந்தி தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்
வா.புகழேந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:
கண்ட இடத்தில் மேடை போடுவது, ஓபிஎஸ் அண்ணனை பற்றி தரக் குறைவாகப் பேசுவது இதுபோன்ற செயலில் மட்டும் தான் எடப்பாடி பழனிசாமிக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் செய்ய தெரியும்.
ஆனால் ஓபிஎஸ்ஸுக்கு எடப்பாடி பழனிசாமி ஒரு பொருட்டே கிடையாது. எடப்பாடி பழனிசாமிக்கு கூடும் கூட்டங்கள் பணம் கொடுத்து வரவழைக்கும் கூட்டம். ஓபிஎஸ் முடிவு சரியாக இருந்ததால்தான் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆதரித்தார்.
எடப்பாடி பழனிசாமி மேடைகளில் ஓபிஎஸ் பற்றி வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்.
மேலும் உங்களுடைய அறிவுரை தேவையில்லை என்று யாரை பார்த்து சொல்கிறார் எடப்பாடி. எம்ஜிஆருடன் நெருங்கிப் பழகியவர் பண்ருட்டி ராமச்சந்திரன்.
சரியான தலைவர் இல்லை என்றால் கட்சி நிலை சரிந்து போகும். பெரியவர்களை
பற்றி பேசும் போது நிதானமாக பேச வேண்டும். பண்ருட்டி ராமச்சந்திரனை பற்றி
பேசியதற்கு எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதேபோல் சீட்டு பார்த்து படித்தால் கூட தவறாக படிக்கிறார்ய பாபா சாஹேபுக்கு
பதில் “பாப்பா” என சொல்கிறார். அம்பேத்கர் தூக்கிலிடப்பட்டார் என்று
பேசியுள்ளார் பழனிசாமி.
பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவுடன் அரசியல் பயனத்தை தொடங்கியவர்,
எம்ஜிஆர் உடன் நெருங்கிப் பழகியவர். அவரைப் பார்த்து தரக் குறைவாக பேசுவதை
எடப்பாடி பழனிசாமி தவிர்க்க வேண்டும் என்றார் புகழேந்தி.







