ராகுல் காந்தி மீதான புகாருக்கு காங்கிரஸ் மறுப்பு – பெண்களை ஒருபோதும் அவர் அவமதிப்பு செய்ததில்லை என விளக்கம்…!

மக்களவையில் பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, அவையில் இருந்து வெளியேறும்…

மக்களவையில் பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக ராகுல் காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசிய ராகுல்காந்தி, அவையில் இருந்து வெளியேறும் போது பறக்கும் முத்த சைகையை காண்பித்ததாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியிருந்தார்.
இதுபோன்ற அநாகரிகமான செயல் இதுவரை நடந்ததில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாஜக பெண் எம்பிக்கள் கையெழுத்திட்ட புகார் மனு மக்களவை சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா காட்சி அடிப்படையில் ராகுல் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் வலியுறுத்தப்பட்டுளளது.

ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டிற்கு காங்கிரஸ் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி பெண்களை ஒருபோதும் அவமதிப்பு செய்ததில்லை என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் ஃபோபியாவில் சிக்கியுள்ளதாகவும், அதிலிருந்து அவர் வெளியே வர வேண்டும் என்று மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

ராகுலின் நடவடிக்கைகள் மனிதம், அன்பு, நேசத்தை சார்ந்தது என்றும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றவர்களும், அதை பார்த்தவர்களும் இதை உணர்ந்தனர் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.