சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக…

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

2024 தேர்தலுக்கு காங்கிரஸை தயார்ப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகளை சோனியா காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக கட்சி நிர்வாகிகள், முக்கிய பிரமுகர்களை சோனியா காந்தி சந்தித்து வருகிறார்.

இந்த நிலையில் ஊடகங்களுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா அளித்த பேட்டியில், “கடந்த வாரத்தில் சோனியா காந்தி பல தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை சந்தித்து பேசியிருந்தார். அவருக்கு லேசான காய்ச்சல் ஏற்பட்டது.  பரிசோதனை செய்ததில் நேற்று மாலை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் மட்டும் இருந்ததால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஜூன் 8ஆம் தேதி ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. எனினும், கொரோனா காரணமாக சோனியா காந்தி நேரில் ஆஜராக வாய்ப்பில்லை எனவும் சுர்ஜிவாலா கூறினார்.

முன்னதாக தான் வெளிநாட்டில் இருப்பதால் ஜூன் 8க்குப் பதிலாக வேறொரு நாளில் ஆஜராக அனுமதிக்க வேண்டுமென ராகுல் காந்தி அமலாக்கத் துறைக்கு கடிதம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.